போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரோனால்டோ சமீபத்தில் சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நஸ்ர்(Al Nassar) அணிக்கு விளையாட ஒப்பந்தம் மேற்கொண்டார். ஆண்டுக்கு 177 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.1,770 கோடி ஆண்டு சம்பளத்திற்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் என்ற சாதனையை ரொனால்டோ பெற்றார்.ரொனால்டோ தற்போது ஜார்ஜினா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். எனவே, ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா மற்றும் 4 குழந்தைகளுடன் சவுதி அரேபிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
சவுதி அரேபிய விதிகளின் படி, திருமணம் செய்யாத ஆண், பெண் சேர்ந்து வாழ முடியாது. இந்த விதியில் இருந்து ரொனால்டோவுக்கு பிரத்தியேகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதியில் உள்ள போலுவா வோர்ல்டு கேளிக்கை பூங்காவில் தனது குடும்பத்தினருடன் பிரத்தியேகமாக பொழுதை கழித்துள்ளார். உலகின் மிகப் பெரிய தீம் பார்க்குகளில் ஒன்றான இங்கு, ரொனால்டோ தனது குடும்பத்தினருடன் யாருடைய தொந்தரவும் இல்லாமல் பொழுதை கழிக்க விரும்பியுள்ளார்.
View this post on Instagram
இவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக பொது பார்வையாளர்களுக்கு 2 மணி நேரம் தடை விதித்த தீம் பார்க் நிர்வாகம், கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்தினருக்கு மட்டும் பிரத்தியேக அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அந்த தீம் பார்க்கில் தனது காதலி ஜார்ஜினா, மற்றும் 4 குழந்தைகளுடன் ஜாலியாக 2 மணிநேரம் விளையாடி பொழுது கழித்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த புகைப்படங்களை காதலி ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cristiano Ronaldo, Saudi Arabia, Theme parks