Home /News /sports /

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்க், முதல் சுற்றில் தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்க், முதல் சுற்றில் தோல்வி

அலிசன் அமிர்தராஜ்

அலிசன் அமிர்தராஜ்

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீராங்கனை அலிசன் ரிஸ்க், முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அலிசன், 147-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை கஷாநோவாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கஷாநோவா 6க்கு2, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    போட்டி தரவரிசையில் முதன் நிலையில் உள்ள அமெரிக்க வீராங்கனை அலிசன் அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.உக்ரைன் போரால் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கஷாநோவா ரஷ்ய கொடி இல்லாமல் விளையாடினார்.

    தோல்வியடைந்த அலிசன் ரிஸ்க் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் குடும்பத்து மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chennai, Tennis

    அடுத்த செய்தி