Home /News /sports /

FIFA World Cup 2022 : தோஹாவுக்கு வாரந்தோறும் 20 கூடுதல் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா

FIFA World Cup 2022 : தோஹாவுக்கு வாரந்தோறும் 20 கூடுதல் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா

இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி - தோஹா விமான சேவையும் இருக்கும்

இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி - தோஹா விமான சேவையும் இருக்கும்

இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி - தோஹா விமான சேவையும் இருக்கும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
4 வருட காத்திருப்புக்கு வரும் நவம்பரில் FIFA World Cup மீண்டும் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 20-ஆம் தேதி, கத்தார் மற்றும் ஈக்வடார் அணிகள் இடையே குரூப் ஏ பிரிவில் நடைபெற உள்ள ஆட்டம் FIFA World Cup 2022 நிகழ்வின் துவக்க ஆட்டமாக அமைய உள்ளது.

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் துவங்க உள்ள கால்பந்து உலக கோப்பை போட்டியான FIFA World Cup 2022-க்கு முன்னதாக டாடா குரூப்பிற்கு சொந்தமான ஏர் இந்தியா, இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து வாரத்திற்கு 20 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கால்பந்து திருவிழாவின் போது எதிர்பார்க்கப்படும் விமான பயண தேவை அதிகரிப்பை இந்த கூடுதல் விமானங்கள் பூர்த்தி செய்யும் என்று ஏர்இந்தியா தனது சமீபத்திய அறிக்கையில் கூறி இருக்கிறது.

இது தொடர்பான அறிக்கையில் கூடுதல் விமானங்கள் பற்றி விரிவாக கூறி இருக்கிறது ஏர்இந்தியா. வரும் அக்டோபர் 30 முதல் அறிமுகப்படுத்தப்படும் இந்த கூடுதல் விமானங்கள் FIFA World Cup 2022 நடக்கும் காலகட்டத்தில் நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னையை கத்தாரின் தலைநகரான தோஹாவுடன் இணைக்கும். வாரத்திற்கு 20 புதிய விமானங்களை இயக்க உள்ள நிலையில் இவற்றில் வாரத்திற்கு 13 விமானங்கள் மும்பையிலிருந்தும், 4 விமானங்கள் ஹைதராபாத்திலிருந்தும், 3 விமானங்கள் சென்னையிலிருந்தும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ | இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

மேலும் இந்த விமானங்களுடன் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் டெல்லி - தோஹா விமான சேவையும் இருக்கும். கடந்த மாதம் ஏர் இந்தியா தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் 14 புதிய விமானங்களை இணைத்த நிலையில் கத்தாருக்கு இந்த கூடுதல் விமானங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் 14 விமானங்களில் டெல்லி-மும்பை, டெல்லி-பெங்களூரு மற்றும் மும்பை-சென்னை வழித்தடங்களில் ஒவ்வொன்றிலும் 2 புதிய ஃப்ரீக்வென்சிகளும், மும்பை-பெங்களூரு வழித்தடத்தில் ஒரு புதிய ஃப்ரீக்வென்சியும் அடங்கும்.

இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறுகையில், உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிகளை நேரில் காண ஆயிரக்கணக்கான் கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த சூழலில் திட்டமிடப்பட்டுள்ள எங்கள் சிறப்பு விமான அட்டவணை, கால்பந்து ரசிகர்களின் முழு பயண அனுபவத்தை வசதியாக வைக்கவும், தடையற்றதாக மாற்றும் வகையிலும் இருக்கும் என்று நம்புவதாக கூறி இருக்கிறார். இதே போல எதிர்காலத்திலும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பறக்கும் அனுபவத்தைத் தொடர்ந்து வழங்க ஏர் இந்தியா செயல்பட உள்ளது என்றும் நிபுன் அகர்வால் கூறி இருக்கிறார்.
Published by:Anupriyam K
First published:

Tags: FIFA

அடுத்த செய்தி