FIFA கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர்!

#AIFF president #PrafulPatel becomes the first Indian in the #FIFACouncil | பிபா கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பிரஃபுல் படேல் பெற்றார்.

news18
Updated: April 7, 2019, 12:08 PM IST
FIFA கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர்!
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் (வலது). (AFP)
news18
Updated: April 7, 2019, 12:08 PM IST
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) உலக நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை நிர்வகித்து வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 29-வது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல், பொதுச்செயலாளர் குஷால் தாஸ், மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Praful Patel, FIFA
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல். (Getty Images)


மாநாட்டில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு பிரஃபுல் படேல், கத்தார் நாட்டின் அல் மொஹன்னதி, சவுதி அரேபியாவின் காலித் அவாத் அல்தெபிட்டி, ஜப்பான் நாட்டின் கோஜோ தஷிமா உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 46 உறுப்பினர்களில் 38 பேர் பிரஃபுல் படேலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்மூலம், ஃபிஃபா கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவரின் பதவிக்காலம் 2019 - 2023. அண்மையில், 2020 ஃபிஃபா 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கால்பந்து தொடரை நடத்தும் உரிமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?
Loading...
ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...