கோமதிக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கியது அதிமுக!

#AIADMK Gave 15 Lakh Rupees To #AsianChampionship2019 Gold Medalist #GomathiMarimuthu | அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஊக்கத்தொகையை வழங்கினர்.

கோமதிக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கியது அதிமுக!
அதிமுக சார்பில் கோமதிக்கு ஊக்கத்தொகை.
  • News18
  • Last Updated: April 30, 2019, 3:20 PM IST
  • Share this:
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து-க்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

கத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாாிமுத்து (30) 2 நிமிடம் 2.70 விநாடிகளில் எல்லையைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இவரின் சாதனையை பராட்டி திமுக சாா்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சாா்பில் ரூ.5 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. நடிகா்கள் ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.5 லட்சமும் வழங்கினா்.


Gomathi Marimuthu, MK Stalin
கோமதி மாரிமுத்து-க்கு பரிசுத்தொகை வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


அதேபோல், கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜ்-க்கு ரூ.10 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினர்.


முன்னதாக, தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோமதி மாரிமுத்து உள்பட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை படைத்த வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடியவில்லை என்று தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.

பேட்ஸ்மேன்களை கடுப்பாக்கிய மன்கட் முயற்சி... அஸ்வினை எச்சரித்த அம்பயர்...!

ஐ.பி.எல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்... ஹைதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சி!

கே.எல்.ராகுல் அதிரடி வீண்... பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading