Home /News /sports /

Danish Open: சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளி பதக்கம் வென்றார்

Danish Open: சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளி பதக்கம் வென்றார்

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்

Vedaant Madhavan: டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச  நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

    டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச  நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    அழைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் மாதவன், இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா நடிகராக (Pan india actor) திகழ்கிறார். இவரது மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் வீரராக திகழ்கிறார். சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறார்.

    அந்தவகையில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (copenhagen) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீட்டர் free பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீட்டர் Fly பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம் வென்றார்.

    இந்த தகவலை நடிகர் மாதவன் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிருந்துள்ளார். அதில், கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபனில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் கருணையுடனும் சஜன் மற்றும் வேதாந்த் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். பயிற்சியாளர் பிரதீப் சார், SFI மற்றும் ANSA ஆகியோருக்கு மிக்க நன்றி. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.



    கடந்த ஆண்டு, 16 வயதான வேதாந்த் மாதவன்  பெங்களூரில் நடைபெற்ற 47வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். அதற்கு முன், மார்ச் 2021 இல் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன் போட்டியில் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    மேலும் படிங்க: IPL 2022: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள், இறுதிப் போட்டி எங்கே?


    சர்வதேச போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள வேதாந்த் மாதவனுக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன், சூர்யா, பிரசன்னா, நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Madhavan, Medal winners

    அடுத்த செய்தி