முகப்பு /செய்தி /விளையாட்டு / தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்ற மாதவனின் மகன்… பிரபலங்கள் பாராட்டு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்ற மாதவனின் மகன்… பிரபலங்கள் பாராட்டு

வேதாந்த் மாதவன்

வேதாந்த் மாதவன்

சிறப்பான திறமையை வெளிப்படுத்திய வேதாந்த், 100 மீ, 200 மீ, மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தங்க பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதற்கு பாராட்டுகளும், லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன. இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் மாதவனுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் போட்டிகளில் ஆர்வம் கொண்ட வேதாந்த் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தந்தை மாதவனுக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார். 17 வயதாகும் வேதாந்த், டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார்.

டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியையொட்டி, வேதாந்திற்கு 6 மாதங்கள் துபாயில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 தேசிய அளவிலான போட்டிகளில், மகாராஷ்டிர அணி சார்பாக வேதாந்த் பங்கேற்றார். இதில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய வேதாந்த், 100 மீ, 200 மீ, மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார். 400 மற்றும் 800 மீட்டர் பிரிவில் வேதாந்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. மகனின் வெற்றியை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், ‘2 கோப்பைகளை வென்றதற்காக மகாராஷ்டிர அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் அபெக்சா பெர்னான்ஸ் 6 தங்கம், 1 வெள்ளி பதக்கத்தையும், வேதாந்த் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இதற்காக ஆக்வா நேஷன் மற்றும் பிரதீப் சாருக்கும், மத்திய பிரதேச அரசு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அனுராக் தாகூர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய தருணம்’ என்று கூறியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)தங்க பதக்கங்களை குவித்த மாதவனின் மகனுக்கும், நடிகர் மாதவனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்பட துறையினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

First published:

Tags: Actor Madhavan