Abhimanyu Mishra: 12 வயதிலேயே செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்: சாதனை படைத்த சிறுவன்

அபிமன்யு மிஸ்ரா

ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட்  மாஸ்டர் பட்டம் வென்றதே கடந்த  19 ஆண்டுகளாக சாதனையாக இருந்துவந்தது. தற்போது இதனை அபிமன்யு மிஸ்ரா முறியடித்துள்ளார்.

  • Share this:
அமெரிக்காவை சேர்ந்த  இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் பனிரெண்டு வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.

ஹெங்கேரி தலைநகர் புத்தபிஸ்ட் நகரில்  உலக கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின்  லியோன் மெண்டோன்கா மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா ஆகியோர் மோதினர். இதில், லியோன் மெண்டோன்கா இந்தியாவின் 67வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆவார்.

இந்த போட்டியில் லியோன் மெண்டோன்காவை வீழ்த்திய அபிமன்யு மிஸ்ரா, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.  12 வயது 4 மாதங்கள் 25 நாட்களில்  கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட்  மாஸ்டர் பட்டம் வென்றதே கடந்த  19 ஆண்டுகளாக சாதனையாக இருந்துவந்தது. தற்போது இதனை அபிமன்யு மிஸ்ரா முறியடித்துள்ளார்.  புத்தபிஸ்ட் நகரில் பல மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு  போட்டித் தொடர்களில் விளையாடி இந்த சாதனையை மிஸ்ரா படைத்துள்ளார்.



தனது சாதனை முறியடிக்கப்பட்டது தொடர்பாக செஸ் டாட் காம்மிற்கு செர்ஜி கார்ஜாகின் அளித்துள்ள பேட்டியில்,  ‘20 ஆண்டுகள் என்பது மிக நீளமானது.  நிச்சயம் இது முறியடிக்கப்பட வேண்டியதுதான்.  இது நிச்சயம் நடைபெறும் என நினைத்தேன். இந்தியர் ஒருவரால் எனது சாதனை முன்னரே முறியடிக்கப்படும் என எண்ணினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதையும் படிங்க: பழங்குடியின குடும்பத்தில் பிறந்த வீராங்கனை தீபிகா குமாரியின் சாதனை கதை..


இந்த சாதனையை படைத்துள்ள மிஸ்ராவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், மிஸ்ரா எதிர்காலத்தில் பெரிய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார் என்றும் கூறியுள்ளார்.

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Murugesh M
First published: