Home /News /sports /

61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து பட்டத்தை கைப்பற்றியது

61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து பட்டத்தை கைப்பற்றியது

61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்

61வது தேசிய தடகள சாம்பியன்ஷிப்

சென்னையில் ஐந்து நாட்களாக களைகட்டிய தடகள திருவிழாவில் 133.5 புள்ளிகளைப் பெற்ற தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது.

சென்னையில் நடைபெற்ற 61-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆடவர் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் தங்கம் வென்றதுடன் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலக தடகளம் என மூன்று சர்வதேச போட்டிகளுக்கும் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர், கடந்த 10-ம் தேதி முதல் நேற்று வரை  களைகட்டியது. இதில், 23 மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட தலைசிறந்த தடகள வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர். அத்துடன் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகளுக்கு தகுதி பெறும் போட்டி என்பதால் வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியிருந்தது.

தொடரின் கடைசி நாளான நேற்று, ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் 17.18 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார். மேலும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலக தடகளம் என அனைத்து சர்வதேச போட்டிக்கும் தகுதி பெற்று சாதனை மேல் சாதனை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

சாம்பியன் பட்டம் வென்ற பிரவீனின் திறமையை பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழக அரசின் பன்னாட்டு அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் சேர்த்து வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்: புதிய தேசிய சாதனையும் படைத்தார் 




இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் தலைசிறந்த வீராங்கனையான ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி 23.27 வினாடியில் இலக்கை கடந்த தமிழக வீராங்கனை தனலட்சுமி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 23.29 வினாடியில் இலக்கை எட்டிய ஹிமா தாஸ் வெள்ளிப்பதக்கத்தையும், 23.72 வினாடியில் கடந்த மஹாராஷ்டிரா வீராங்கனை ஐஸ்வர்யா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.


இதேபோல் ஆடவருக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் சந்தோஷ் 50.16 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 49.76 வினாடியில் இலக்கை தொட்ட கேரள வீரர் ஜபீர் தங்கம் வென்று அசத்தினார். அனைவரின் எதிர்பார்ப்பை எகிரச்செய்த ஆடவர் 400 மீ தொடர் ஓட்டத்தில் ஒலிம்பிக் நாயகர்கள் களம்கண்டனர்.

மேலும் படிக்க: பெருகும் ஐபிஎல் வருவாயினால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்களுக்கு எகிறும் பென்ஷன்- குவியும் பாராட்டுகள்


தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியன் இந்திய அணியாக களம் கண்டு அரங்கத்தை அதிரவைத்தனர். விறுவிறுப்பின் உச்சம் தொட்ட இந்த போட்டியில் ஆரோக்கிய ராஜூவின் இந்திய அணி 3 நிமிடம் 5 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றதுடன் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தினர். இதேபோல் மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சுபா வெங்கடேஷை உள்ளடக்கிய தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

சென்னையில் ஐந்து நாட்களாக களைகட்டிய தடகள திருவிழாவில் 133.5 புள்ளிகளைப் பெற்ற தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது. ஹரியானா இரண்டாவது இடத்தையும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
Published by:Murugesh M
First published:

Tags: Athlete, Sports

அடுத்த செய்தி