51-வது சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்!

51 ஆண்டு கால சிறப்பு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இந்தப் போட்டியை நடத்துகிறது.

news18
Updated: August 3, 2019, 6:40 AM IST
51-வது சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்!
சென்னை நேரு ஸ்டேடியம்
news18
Updated: August 3, 2019, 6:40 AM IST
மனவளர்ச்சி குன்றியோருக்கான 51-வது சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உட்பட 15 நாடுகளில் இருந்து 168 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இந்தப் போட்டியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வின் குமார் செளபே, இசைஞானி இளையராஜா ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

51 ஆண்டு கால சிறப்பு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா இந்தப் போட்டியை நடத்துகிறது. இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக சென்னை ஓட்டேரியை சேர்ந்த பிளாட்டினி மாறன் கடந்த 2015ல் அமெரிக்காவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர்.


ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட இவருக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஊழியர்கள் சார்பில் கால்பந்து விளையாட்டிற்கான காலணி பரிசாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...