Home /News /sports /

சென்னை செஸ் ஒலிம்பியாட்: இன்றிலிருந்து டிக்கெட் விற்பனைத் தொடக்கம்

சென்னை செஸ் ஒலிம்பியாட்: இன்றிலிருந்து டிக்கெட் விற்பனைத் தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை இன்று முதல்

செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை இன்று முதல்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் திருவிழாவை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

    ஆன்லைனில் tickets.aicf.in என்ற இணையதளத்திலிருந்து டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட் கட்டணம் ரூ.200 ரூபாயிலிருந்து 8000 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் கட்டணம் 2 மணி நேரத்திற்கு 200 மற்றும் 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதே போல் ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.2000 மற்றும் 3000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 6000 மற்றும் 8000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    1927 முதல் நடைபெற்று வரும் FIDE-யின் செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை இந்தியா ஒரு முறை கூட நடத்தியதில்லை. 43 முறை இதுவரை இந்த செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்ட போதிலும் இந்தியாவில் ஒருமுறை கூட நடத்தியதில்லை. இப்போது 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chennai, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி