சென்னை, மாமல்லபுரத்தில் நாளை, 28ம் தேதி தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக 6 இந்திய அணிகள் களமிறங்குகின்றன. இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது.
செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளை சேர்ந்த 2,000த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் அதிக அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்ற வரலாற்று சாதனையை இந்த போட்டி பெறுகிறது.
இதன்படி இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது. ஓபன் பிரிவில் இந்தியா 1 அணியில் விதித் குஜராத்தி, ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகாசி, எஸ்.என்.நாராயணன், சசிகிரண், இந்தியா 2 அணியில் நிஹல் சரின், டி.குகேஷ், அதிபன், பிரக்ஞானந்தா, ரானக் சத்வானி.
இந்தியா 3 அணியில் சூர்யசேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி, அபிமன்யு புரானிக், பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி, இந்தியா 2 அணியில் வந்திகா அக்ரவால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி, திவ்யா தேஷ்முக், இந்தியா 3 அணியில் ஈஷா காரவடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யூஷா போட்டா, நந்திதா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஓபன் பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் கிராண்ட்மாஸ்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோரை கொண்ட இந்தியா 1 அணிக்கு போட்டி தரநிலையில் 2-வது இடமும், பெண்கள் பிரிவில் கோனோ ஹம்பி, ஹரிகா உள்ளிட்டோர் அடங்கிய இந்தியா 1 அணிக்கு போட்டித்தரநிலையில் முதலிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகள் மீதே எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்த முறை செஸ் ஒலிம்பியாட்டில் அணிக்கு ஆலோசகராக செயல்படவிருக்கிறார். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.