15 நாட்களில் 4 தங்கப்பதக்கம் - கலக்கும் ஹிமா தாஸ்

அடுத்தடுத்து தங்கம் வென்று குவிக்கும் ஹிமா தாஸ்க்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

news18
Updated: July 19, 2019, 8:24 AM IST
15 நாட்களில் 4 தங்கப்பதக்கம் - கலக்கும் ஹிமா தாஸ்
தங்கம் வென்ற ஹீமா தாஸ்
news18
Updated: July 19, 2019, 8:24 AM IST
செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

செக்குடியரசு நாட்டில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 23.25 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

19 வயதேயான ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், கடந்த 15 நாட்களில் வெல்லும் 4-வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2-ம் தேதி போலந்தில் நடந்த போஸ்னான் மற்றும் கட்னோ தடகளப் போட்டிகளிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் அடுத்தடுத்து தங்கம் வென்றுள்ளார்.

கடந்த 13-ம் தேதி செக் குடியரசின் கிளாட்னோவில் நடந்த தடகளப் போட்டியிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாவின் முந்தைய சாதனை 23.10 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவருக்கான 400 மீட்டர் தூரத்தை 45.40 வினாடிகளில் ஓடிக் கடந்த இந்திய வீரர் கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆனஸ், முதலிடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான நோவா நிர்மல், இத்தூரத்தை 46.59 வினாடிகளில் கடந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

Loading...

அடுத்தடுத்து தங்கம் வென்று குவிக்கும் ஹிமா தாஸ்க்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...