ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விறுவிறுப்படையும் 2026 உலகக் கோப்பை ஏற்பாடு..! ஃபிபா கால்பந்து தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு

விறுவிறுப்படையும் 2026 உலகக் கோப்பை ஏற்பாடு..! ஃபிபா கால்பந்து தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு

கால்பந்து

கால்பந்து

FIFAWorldCup 2026 : கனடாவில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  2026- ஆம் ஆண்டு ஃபிபா கால்பந்து தொடருக்கான மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மைதானங்கள் அமெரிக்காவிலும், மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் 3 மைதானங்களும் கால்பந்து போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  வரலாற்றில் முதல் முறையாக, உலக கோப்பை தொடரை 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் 2026- ஆம் ஆண்டு உலக கோப்பை கால் பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக மைதானங்களை தேர்வு செய்து ஃபிபா அறிவித்துள்ளது. அதில் 11 மைதானங்கள் அமெரிக்காவிலும் மெக்சிகோ மற்றும் கனடாவில் தலா 3 மைதானங்களும் இடம் பிடித்துள்ளன.

  அமெரிக்காவில் நியூயார்க்கின் மெட்லைஃப் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சல்சின் SoFi , டல்லாஸ்-சின் AT&T, சான் பிரான்சிஸ்கோவின் லெவி , மியாமியின் ஹார்ட் ராக்; அட்லாண்டாவின் மெர்சிடிஸ்-பென்ஸ், சியாட்டிலின் லுமன் ஃபீல்ட், ஹூஸ்டனின் NRG, பிலடெல்பியாவின் லிங்கன் பினான்சியல் பீல்ட், கன்சாஸ் சிட்டியின் , மிசோரி அரோஹெட், மற்றும் பாஸ்டனின் ஜில்லட் ஆகிய 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 80 போட்டிகளில் 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. காலிறுத்திக்கு பின்னர் அனைத்து போட்டிகளும் அமெரிக்காவில் மட்டுமே நடைபெறுகின்றன. இதற்கு முன்னர் 1994- ஆம் ஆண்டு அமெரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டது.

  மெக்சிகோவை பொறுத்தவரை குவாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரோன், மான்டேரியாவின் எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர், மெக்ஸிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெக மைதானங்களில் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. மெக்சிகோவில் 10 போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  Also Read: ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் விளாசல்.. ஆவேஷ் கான் அசத்தல் - 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

  அஸ்டெக மைதானத்தில் ஏற்கெனவே 1970 மற்றும் 1986-ல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெறும் முதல் மைதானம் என்ற பெருமையை அஸ்டெக பெறுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கனடாவின் டொராண்டடா மற்றும் வான்கூவரில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. மெக்சிகோவைப் போலவே கனடாவிலும் 10 பேட்டிகள் நடைபெறும். கனடாவில் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. முன்பு போல் அல்லாமல் அனைத்து மைதானங்களிலும் இயற்கை புல் தரையில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: FIFA, Football