உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனாவிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 66,492 பேர் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தவிர 25 நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் இதுவரை இந்த நோய்க்கு உயிரிழந்தனர்.
இதனால் அச்சமடைந்துள்ள உலக நாடுகள் தங்கள் நாடுகளில் நடக்கவிருந்த சர்வதேச அளவிலான பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன. சமீபத்தில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடக்கவிருந்த உலகின் மிகப்பெரிய செல்போன் கண்காட்சியான, ‘உலக மொபைல் காங்கிரஸ்’ கூட ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ‘2020 ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யவோ, இல்லை இடமாற்றவோ வேண்டாம்,’ என உலக சுகாதார நிறுவனம் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவுரை வழங்கி இருந்தது.
இந்நிலையில் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் 5 மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இவற்றை ஒலிம்பிக் சம்மேளனம் மறுத்துள்ளது. கொரானோ வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் இடம் மாறாவோ, தள்ளிவைக்கவோ எந்த எண்ணமும். ஒலிம்பிக் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜீலை மாதம் 7-ம் தேதி டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.