காவல்துறையில் வேலை கிடைத்தாலயே ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெற முடிந்தது - தடகள வீரர் நாகநாதன் உருக்கம்

நாகநாதன் பாண்டி

தமிழக காவல்துறையில் வேலை கிடைத்ததாலயே ஒலிம்பிக்கில் தேர்ச்சி பெற முடிந்தது என்று தடகள வீரர் நாகநாதன் பாண்டி தெரிவித்துள்ளார்.

  • Share this:
ப்பான் தலைநகர் டோக்கியோவில் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் தடகள பிரிவுக்கான போட்டிகள் ஜுலை 31ம் தேதி தொடங்குகின்றன. இந்தநிலையில் இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில், 5 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த நாகநாதன் பாண்டி 4*400 மீ தொடர் ஓட்டம் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் கனவு சாத்தியமானது எப்படி என்பது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக நாகநாதன் பாண்டி பேட்டியளித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில விளையாடப்போறேன் என்பதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயமா பதக்கத்தோடு திரும்பி வருவோம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அப்பா, அம்மா இரண்டு பேரும் விவசாயம் பார்த்துதான் எங்கள படிக்க வச்சாங்க. இரண்டு தங்கச்சி, ஒரு அண்ணன் நாங்க நாளு பேரு. சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது அதிக ஈடுபாடு இருந்தது. சூ, ஸ்பைக்ஷ் வாங்க வசதி இல்லாததால் மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததது என்று வருத்தமடைந்தார்.

கிடைத்த ஒரு சூவையும் பத்திரப்படுத்தி கடினமாக உழைத்து கல்லூரியில் சீனியர் அண்ணன் வழிகாட்டியதன் அடிப்படையில் தடகளத்தில் சாதிக்க முடிந்ததாக பெருமையடைகிறார்.
கல்லூரியில் ஓட்டப்பந்தயத்தில் சாதித்ததால் Form III சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் மூலம் தமிழக காவல்துறையில் சேர்ந்து அதிலிருந்து வந்த சம்பளம் மூலம் சூ வாங்கி, முறையாக பயிற்சி மேற்கொண்டு தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவருவதாகவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் தமிழ்நாட்ல பணம் இருக்குறவங்க மட்டும்தான் ஸ்போர்ட்ஸ் பண்ண முடியும். திறமை இருக்குறவங்க ஸ்போர்ட்ஸ் பண்ணவே முடியாது எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் சேர்ந்ததால் மட்டுமே எனக்கு இது சாத்தியப்பட்டது எனவும் பள்ளிப்பருவத்திலிருந்தே இந்த உதவி கிடைத்திருந்தால் இன்னும் பல சாதனைகள் புரிந்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் படக்கூடாது எனவும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன் எனவும் நம்பிக்கையளித்துள்ளார்.
Published by:Karthick S
First published: