ரஷ்யாவில் இருந்து வெளியாகும் 'ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன். நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்தாலோசித்தேன்.
அதன்படி அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது உடலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். உடலுறவுகொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு
உடலுறவு நல்ல பலனை கொடுக்கும். உடலுறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கும். அதனால் விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுப்படுத்தப்படும்.
தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.