Home /News /sports /

டைமண்ட் லீக் சாம்பியனான முதல் இந்தியர்..!- வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் சாம்பியனான முதல் இந்தியர்..!- வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

Neeraj Chopra : டைமண்ட் லீகில் வென்ற முதல் இந்தியர் என்று புதிய வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
டோக்கியோ ஒலிம்பிக் தங்கமகன் ஈட்டி எறிதல் ஜாம்பவானான இந்தியாவின் நீரஜ் சோப்ரா லாசேனில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்றார், இதன் மூலம் டைமண்ட் லீகில் வென்ற முதல் இந்தியர் என்று புதிய வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா.

காமன்வெல்த் போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத நீரஜ் சோப்ரா, 89.08 மீ தூரம் விட்டெறிந்தார். இதுதான் இவரது கரியரில் சிறந்த த்ரோ. 2வது த்ரோ 85.18மீ, 4வது த்ரோ ஃபவுல் ஆனது. 5ம் சுற்றை விட்டு விட்டார். 6வது சுற்றில் 80.04மீ தூரமே எறிந்தார்.
ஆனால் 89.08 மீ தூரம் சாம்பியன் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது, இவருக்கு முன்னதாக டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா டாப் 3- இடத்தில் வந்துள்ளார்.அதாவது இருமுறை 2ம் இடம் பிடித்துள்ளார் விகாஸ். கவுடா. அதாவது விகாஸ் கவுடா 2012, நியூயார்க், 2014 தோஹாவில் 2ம் இடமும், 2015-ல் ஷாங்காய் மற்றும் யூஜீனி 3ம் இடமும் வந்துள்ளார்.

சாம்பியன் ஆகி வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா கூறும்போது, “முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 89 மீ தூரம் என்பது பிரமாதமான விஷயம்தான். காயத்திலிருந்து வந்து வென்றிருப்பதால் இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது.” என்றார்.

Also Read: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் உறுதி

இதனையடுத்து ஜூரிச்சில் செப்டம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் டைமண்ட் லீக் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் சோப்ரா. ஜூரிச் இறுதிக்குத் தகுதி பெற்ற ஜாம்பவான்கள்: வாட்லீயிச், ஜூலியன் வெப்பர்,  ஆண்டர்சன் பீட்டர்ஸ், தாம்சன், பாட்ரிக்ஸ் இவர்களோடு நீரஜ் சோப்ராவும் தகுதி பெற்றுள்ளார். இதோடு நீரஜ் சோப்ரா 2023 புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றார். இதே ஸ்டாக்ஹோம் லெக் டைமண்ட் லீகில் சோப்ரா 2ம் இடத்தில் முடிந்தார். இதில் 89.94 மீ தூரம் எறிந்தார் சோப்ரா. அந்தத் தொடரில் முதலிடம் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆவார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Athlete, Neeraj Chopra, Sports Player

அடுத்த செய்தி