Home /News /sports /

வெறும் 4 மாதங்களில் இது சாத்தியமே இல்லை; செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை வியந்து பாராட்டும் செஸ் வீரர் வீராங்கனைகள்!

வெறும் 4 மாதங்களில் இது சாத்தியமே இல்லை; செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை வியந்து பாராட்டும் செஸ் வீரர் வீராங்கனைகள்!

44வது செஸ் ஒலிம்பியாட்.

44வது செஸ் ஒலிம்பியாட்.

Chess Olympiad: “இப்போதிலிருந்து உலகில் நான் பயணம் செய்த 61 நாடுகளில்  இந்தியாதான் எனக்கு மிகப் பிடித்த நாடு. நான் சென்ற பெரும்பாலான இடங்களில் எனக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு வியந்துபோனேன்.”

    செஸ் ஒலிம்பியாட்டுக்கு கலந்துகொள்ள வந்திருக்கும் வெளிநாட்டு வீரர் வீராங்கனைகள் பலர் சென்னை மாமல்லபுரத்தில் போட்டிகளுக்காக நடத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் விருந்தோம்பலைப் பாராட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    உக்ரைனைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆண்டிரிய் வோலோகிடின் செஸ் ஒலிம்பியாட்டிற்கு சென்னையும் இந்தியாவும் கொடுத்திருக்கும் கவனத்தைப் பார்த்து நான் வியந்துபோனேன். மாஸ்கட் தம்பி எங்கும் பார்த்தாலும் இருக்கிறது. 44வது செஸ் ஒலிம்பியாட்டை சிறந்த ஒன்றாக மாற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு என் மரியாதை.” எனத் தெரிவித்துள்ளார்.



    ஜெர்மன் செஸ் கூட்டமைப்பின் தலைவரான கெவின் ஹோகி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டை ஒருங்கிணைத்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுடைய செஸ் நட்சத்திரங்களான விஸ்வநாதன் ஆனந்த உள்ளிட்டோரை வைத்து ஒரு ஒலிம்பியாட் பாடலையும் உருவாக்கியிருப்பது ஆச்சரியமளிக்க வைக்கிறது. என்ன கவரக்கூடிய ராகம்.” எனத் தெரிவித்துள்ளார்.



    மேலும் போட்டி நடக்கும் அரங்கத்தைக் குறித்து “என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரமிப்பு அளிக்கக்கூடிய ஆடுகளம். ஒருங்கிணைப்பாளர்களுக்கு என்னுடைய மிகுந்த மரியாதைகள்.” எனப் பாராட்டியுள்ளார்.


    லக்ஸம்பர்க் நாட்டின் செஸ் வீராங்கனையான ஃபியோனா ஸ்டெயில் ஆண்டனி “நான் இங்கு வந்து 24 மணிநேரம் கூட ஆகவில்லை. ஆனால் சென்னையில் என் முதல் அனுபவம் தனித்துவமானதாக உள்ளது. விமான நிலையத்தில் வேகமாகச் சோதனைகள் முடிக்கப்பட்டு, மிகுந்த கனிவான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தூரமாக இருந்தாலும் ஹோட்டல் நன்றாக இருக்கிறது. உணவு அற்புதம். விளையாடுவதற்கும் இந்தியாவை தெரிந்துகொள்வதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்.” என தன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.



    பத்திரிகையாளரான டேவிட் லாடா “இப்போதிலிருந்து உலகில் நான் பயணம் செய்த 61 நாடுகளில்  இந்தியாதான் எனக்கு மிகப் பிடித்த நாடு. நான் சென்ற பெரும்பாலான இடங்களில் எனக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு வியந்துபோனேன். இங்கிருக்கும் மக்கள் எங்கும் இல்லாததுபோல் திறந்த மனம் உடையவர்களாக உள்ளனர்.” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


    இங்கிலாந்து பெண்கள் செஸ் அணியின் இயக்குநர் அக்னெயிஸ்கா மிலெவ்ஸ்கா “நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ளப்படுகிறோம். பாதுகாப்புதான் முதன்மையானது.” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



    மேலும் பலரும் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளையும் விரும்தோம்பலையும் பாராட்டி டிவிட்டரில் எழுதி வருகின்றனர்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி