அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

news18
Updated: September 10, 2018, 9:48 AM IST
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்
நோவக் ஜோகோவிச்
news18
Updated: September 10, 2018, 9:48 AM IST
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து முடிந்துள்ளது. இதில் அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

வெற்றிபெற்ற சந்தோஷத்தில் நோவாக் ஜோக்கோவிச்


தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில் எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில்  டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த, நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்