உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு கொரோனோ தொற்று

நோவாக் ஜோகோவிச்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலீனா இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
செர்பிய தலைநகர் Belgrade-ல் Adria டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க Belgrade சென்ற உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சின் குடும்பத்திற்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எந்தவிதமான கொரோனோ அறிகுறியும் இல்லாத நிலையில் ஜோகோவிச்சுக்கும் அவரது மனைவிக்கும் பாசிட்டிவ் எனவும்  மகனுக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் தனிமையில் இருந்துவிட்டு மீண்டும் கொரோனோ சோதனை செய்யவுள்ளதாகவும் ஜோகோவிச் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க வந்த மூன்று டென்னிஸ் வீரர்களுக்கு ஏற்கனவே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோகோவிச்சுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டென்னிஸ் உலகம் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Also read... லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே மரணம்...! உலகிலேயே இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு

கடந்த சில தினங்களுக்கு முன் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை ரசிகர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் டென்னிஸ் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருப்பது அமெரிக்க ஓபன் நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: