கொரோனா அச்சம்: புதிய விதிமுறைகளை அமல்படுத்திய கால்பந்து சங்கம்

Football New Rules | முக்கியமாக போட்டி முடிந்ததும் வீரர்கள் தங்களுக்குள் ஜெர்ஸி மாற்றிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா அச்சம்: புதிய விதிமுறைகளை அமல்படுத்திய கால்பந்து சங்கம்
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கால்பந்து போட்டிகளில் பல புதிய விதிமுறைகளை கால்பந்து சங்கம் அமல்படுத்தி வருகிறது.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் விளையாட்டு உலகமே முடங்கிக் கிடக்கிறது. இதற்கு கால்பந்து விதிவிலக்கல்ல. இந்நிலையில் கொரோனோ பரவுவதை தடுக்கவும், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தென் அமெரிக்க கால்பந்து சங்கங்கள் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் பிரேசில், சிலி, பராகுவே, பொலிவியா, கொலம்பியா, பெரு, உருகுவே போன்ற நாடுகளை உள்ளடக்கிய தென் அமெரிக்க கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளூர் கால்பந்து போட்டிகளுக்கு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


மைதானத்தில் வீரர்கள் எச்சில் உமிழ்தல் கூடாது, மகிழ்ச்சியின் போது கால்பந்திற்கு கொடுக்கும் முத்தம் இனி கூடாது.

போட்டிக்கு முன்பும், பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  மாற்று வீரர்கள் மைதானத்திற்கு வெளியில் அமர்ந்திருக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தங்களுடைய வாட்டர் பாட்டிலில் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக போட்டி முடிந்ததும் வீரர்கள் தங்களுக்குள் ஜெர்ஸி மாற்றிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளுடன் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

இந்தியாவில்  கிரிக்கெட் விளையாட்டு எப்படி பிரபலமோ அதே போல் தென் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். மூலை முடுக்கெங்கும் கால்பந்து விளையாடப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால் தென் அமெரிக்க கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்த புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading