ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்தவுள்ளேன் - நீடா அம்பானி

இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்தவுள்ளேன் - நீடா அம்பானி

நீடா அம்பானி

நீடா அம்பானி

இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்தவுள்ளேன் என்று நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சர்வேதச ஒலிம்பிக் குழுவால் வழங்கப்படும் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் மதிப்புகள் கல்வித் திட்டத்தை தொடங்குவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் நிடா அம்பானி இன்று ஒடிசாவில் அறிவித்துள்ளார்.

  ஒலிம்பிக்கின் முக்கிய கருப்பொருளை உள்ளடக்கி கல்வி மற்றும் விளையாட்டை இணைத்து ஒலிம்பிக் மதிப்புகள் கல்வித் திட்டத்தில் வழங்கப்படவுள்ளது. குழந்தைகள் உத்வேகமாகவும், ஆரோக்கியமாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் உருவாவதற்கு இந்த தரமான பாடத்திட்டத்தை அவர்களிடம் பரப்புவதை இந்தக் இயக்கம் இலக்காக் கொண்டுள்ளது.

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீடா அம்பானி தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் இந்தியாவில் நடைபெறுவதை உறுதிசெய்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் விளையாட்டின் பன்முகத்தன்மையுடன் ஒலிம்பிக்கின் மீது கனவுடன் இருப்பவர்களுக்கு உத்வேகம் அளித்ததன் மூலம்

  இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் புதிய சகாப்த்தத்தைப் பதித்துள்ளது.

  இதுகுறித்து பேசிய நீடா அம்பானி, ‘எல்லைகளற்ற சாதகங்கள் மற்றும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் கொண்ட மண் இந்தியா. திறமை மற்றும் ஆற்றல் நிரம்பி வழியும் 25 கோடி குழந்தைகளை நம்முடைய பள்ளிகளில் நாம் கொண்டுள்ளோம். அவர்கள்தான் நாளை வெற்றியாளர்கள். இந்தியாவின் எதிர்காலம் அவர்கள்தான். குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர்கள் மட்டுமே ஒலிம்பிக் வீரனாக உருவாக முடியும்.

  ஆனால், எல்லா குழந்தைகளும் ஒலிம்பிக் லட்சியங்களை எட்ட முடியும். அதுதான் ஒலிம்பிக் மதிப்புகள் கல்வித் திட்டத்தின் இலக்கு. அதுதான் இந்தியாவில் பெருமளவிலான வாய்ப்புகளை உருவாக்கும். மும்பையில் அடுத்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தை நாம் தயார் செய்துள்ளபடி நடத்திவிட்டு, இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்தவுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Nita Ambani, Olympic Council