முத்தரப்பு டி20 - இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்

news18
Updated: March 11, 2018, 2:57 PM IST
முத்தரப்பு டி20 - இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்
லிட்டான் தாஸ்
news18
Updated: March 11, 2018, 2:57 PM IST
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. மூன்றாவது போட்டி கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்  வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச  அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குனதிலகா, பிகேஜி மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். குனதிலகா 19 பந்துகளில் 26 ரன்களும் மெண்டிஸ் 30 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய பெரரா 48 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன. 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமதுல்லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தமீம் இக்பால்  மற்றும் தாஸ் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தமீம் இக்பால் 29 பந்துகளில்  47 ரன்களும் தாஸ் 19 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இந்த அணியில் அதிகபட்சமாக ரஹீம் 35 பந்துகளிலும் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தத்தில் 19.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதன்மூல இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
First published: March 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்