இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

cricketnext
Updated: March 13, 2018, 4:07 PM IST
இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி
cricketnext
Updated: March 13, 2018, 4:07 PM IST
முத்தரப்பு டி20 தொடர் 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேற்று வீழ்த்தியுள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 அணிகள் விளையாடி வரும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில்  இந்திய அணியும் இலங்கை அணியும் மோதியது.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதால்  19 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டன.

இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9  விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்திருந்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக பிகேஜி மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார். 38 பந்துகளை மட்டும் சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.  இந்திய தரப்பில் எஸ்.என்.தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது பேட்டிங்கை இந்திய அணி தொடங்கியது. 17.3 ஓவர்களிலேயே 153 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. அதிரடியாக விளையாடிய மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

 
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்