உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணி என்பதால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விதிமுறை விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், நியூசிலாந்து ரக்பி அணி, அதனை கிண்டல் செய்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின.
போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் ஒரே ஸ்கோரை அடிக்க, அதுவும் டை ஆனது. இதனால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ஐசிசியின் இந்த விதிமுறை பலத்த சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. கூடுதலாக ஒரு ஓவர் சூப்பர் ஓவராக வீசியிருக்கலாம் என்றும் பல கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது வரை இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கும் நிலையில், நியூசிலாந்து ரக்பி அணி, தன் பங்கிற்கு ஐசிசியை சீண்டியுள்ளது.
ப்ரீடம் கோப்பை ரக்பி தொடரில் வெலிங்டனில் நடந்த தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து மோதிய போட்டி 16-16 என்ற கணக்கில் டிரா ஆனது. போட்டி முடிந்த பின்னர், “வெலிங்கனில் பவுண்டரி கணக்குகள் பின்பற்றப்படவில்லை. போட்டி டிரா ஆனது” என்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சையை மையமாக வைத்து, நியூசிலாந்து அணியின் ரக்பி அணி கிண்டல் செய்துள்ளது.
No count back on boundaries in Wellington. It's a draw. Thanks for an epic Test @Springboks.#NZLvRSA #BACKBLACK 🇳🇿🇿🇦 pic.twitter.com/iJKkskeELf
— All Blacks (@AllBlacks) July 27, 2019
ப்ரீடம் ரக்பி தொடரில் நியூசிலாந்து அணியே அதிக முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.