மும்பையைச் சேர்ந்த நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி இடது கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் சர்வதேச கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் என்ற வரலாற்றை நிகழ்த்தினார். ஆனால் இவருக்கு முன்னாலேயே ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்து பவுலர் இருக்கிறார்.
ஆனால் அது முதல் தர கிரிக்கெட்டில், டெஸ்ட் போட்டியும் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்ட ஒன்றுதானே. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம் லேக்கர் ஒரே டெஸ்ட்டில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் உட்பட 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை பாகிஸ்தானுக்கு எதிராகக் கைப்பற்றினார். அஜாஸ் படேல் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் இன்னிங்ஸில் 10 விக்கெட் சாதனையுடன் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இன்னொரு சாதனையையும் படைத்தார்.
அனைத்து முதல் தர கிரிக்கெட் சாதனையை எடுத்துக் கொண்டால் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2வது பவுலர்தான். இவருக்கு முன்பாக அதுவும் அறிமுகப் போட்டியிலேயே ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டைக் கைப்பற்றிய நியூசிலாந்து பவுலர் ஆல்பர்ட் மோஸ். இவர் வெலிங்டனுக்கு எதிராக கேண்டர்பரி அணிக்காக 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் கைப்பற்றியுள்ளார். இது எப்ப என்று கேட்கிறீர்களா? 1889-90-ம் ஆண்டு கிறைஸ்ட் சர்ச்சில்.
இன்னொரு நியூசிலாந்து பவுலர், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு ஆடியவர், ஷெஃபீல்ட் ஷீல்டு கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு கைப்பற்றினார் ஒரே இன்னிங்சில். இவர் ஒரு லெக் ஸ்பின்னர், பெயர்: கிளாரி கிரிம்மெட், இது 1930-ல், நியூசிலாந்தில் பிறந்தாலும் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வாய்ப்பு பிரகாசமாக இருந்ததால் இவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டார். ஏனெனில் 1914-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நியூசிலாந்து டெஸ்ட் ஆடும் அணிகளில் இடம்பெறவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs New Zealand