ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பெரிய கோவக்காரரா இருப்பாரோ - டிராவிட் வீடியோவும் கோலி ரியாக்‌ஷனும்

பெரிய கோவக்காரரா இருப்பாரோ - டிராவிட் வீடியோவும் கோலி ரியாக்‌ஷனும்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டரில் டிராவிட் குறித்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ‘பொறுமையே பெருமை’ என்பது டிராவிட் பாலிசி. எத்தனையோ டெஸ்ட் மேட்ச்களில் தனது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியை கரை சேர்த்தவர். பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிக் காட்டுவதில் கில்லாடி நாம் டிராவிட். பிரட் லீ, அக்தர் எல்லாம் வேர்த்து விறுவிறுக்க 140 கி.மீ மேல பந்து வீசுனால் பேட்ல படும் பந்து பிட்ச கூட தாண்டாது அப்டி ஒரு மாஸ்டர் ஸ்டோக் ஆடுவார் டிராவிட். போங்க தம்பி போங்க வேற பவுலர் இருந்தா அனுப்புங்கன்னு அப்படிங்கிற மாதிரி இருக்கும் டிராவிட்டின் பாடி லாங்குவேஜ். கிரிக்கெட்டுல இருந்து ரிட்டயர்ட் ஆனதும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் கோச்சாக சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறார்.

  இந்திய கிரிக்கெட்டுக்கு இளம்படையை அற்புதமாக தயார் செய்து வருகிறார் டிராவிட். இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட் ஒரு மகத்தான பணியை செய்து வருகிறார் என வெளிநாட்டு கிரிக்கெட்டர்களே அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

  இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில் டிராவிட் குறித்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார். ’ராகுலின் இந்த பக்கத்தை நான் பார்த்ததில்லை’ என ட்வீட் செய்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

  அது ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பரம். கிரெடிட் கார்ட் தொடர்பான விளம்பரம் படம் அது. அதில் கோபமாக வசனம் பேசும் டிராவிட் கார் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைபார். இந்த வீடியோவுக்கு தான் கோலி இவ்வாறு ரியாக்ட் செய்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cricket, IPL 2021, Rahul Dravid, Virat Kohli