• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கேல் ரத்னா விருது: நிராஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு அறிவிப்பு!

கேல் ரத்னா விருது: நிராஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு அறிவிப்பு!

கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உட்பட 12 பேருக்கு கேல் ரத்னா (Major Dhyan Chand Khel Ratna Award) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது (Major Dhyan Chand Khel Ratna Award) அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2021ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது.

    இதில், 12 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது( இதற்கு முன்னர் ராஜீத் காந்தி கேல் ரத்னா விருது என அழைக்கப்பட்டது) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வீரர்களின் விவரம்: நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ,  இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பாரா ஷூட்டர் அவனி லெகாரா, பாரா தடகள வீரர் சுமித் அன்டில், பாரா பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர், பாரா ஷூட்டர் மணீஷ் நர்வால், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன். மன்பிரித் சிங், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்,கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.

    இதையும் படிங்க: உலகக் கோப்பையில் இந்தியா கிரிக்கெட் அணி தோல்வி... ஐபிஎல்தான் காரணம்: பிசிசியை குற்றம் சாட்டும் ரசிகர்கள்!


    இதற்கிடையில், 35 இந்திய விளையாட்டு வீரர்களும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 13, 2021 அன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், விருது அறிவிக்கப்பட்டவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெறுவார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: