நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த நீரஜ் சோப்ரா, தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும், பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தனது நான்காவது முயற்சியில், 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், அஞ்சு பாபி ஜார்ஜ்ற்கு பிறகு, பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அஞ்சு பாபி ஜார்ஜ் 2003யில் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் நடந்த உரையாடலை பகிர்ந்தார். அவர் அர்ஷத் நதீமை வெகுவாக பாராட்டியதாக குறிப்பிட்டார்.
மேலும், “போட்டி முடிந்த பிறகு நான் நதீமுடன் பேசினேன். அவர் தனது திறமையை நன்றாக வெளிபடுத்தினார். அவருக்கு முழங்கையில் பிரச்சனை இருப்பதாக கூறினார். இருந்தும் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து 86 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்தது பாராட்டுக்குறியது” என தெரிவித்தார்.
2018 ஏசியன் போட்டியில், நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் ஒருவரை ஒருவர் மேடையில் பாராட்டிக்கொண்டது அப்போது வைரலானது. மேலும், அந்த நான்காவது முயற்சிக்கு பின், நீரஜ் தனது தொடையில் வலி இருந்ததால், அதற்கு பிறகு முயற்சி எடுக்க முடியவில்லை என கூறினார்
இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India and Pakistan, Neeraj Chopra, Sports