Home /News /sports /

உலகக்கோப்பை ஹாக்கி: டிக்கெட் விற்பனை தொடங்கியது!

உலகக்கோப்பை ஹாக்கி: டிக்கெட் விற்பனை தொடங்கியது!

உலகக்கோப்பை டிக்கெட்டை வாங்கிய ஒடிசா முதலமைச்சர் (Twitter/HockeyIndia)

உலகக்கோப்பை டிக்கெட்டை வாங்கிய ஒடிசா முதலமைச்சர் (Twitter/HockeyIndia)

Naveen Patnaik Buys Rs. 500 Ticket For Hockey World Cup Opening Ceremony | ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், தொடக்க விழாவின் முதல் டிக்கெட்டை 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். ஹாக்கி இந்தியா தலைமை செயல் அலுவலர் எலெனா நார்மன் அவருக்கு டிக்கெட்டை வழங்கினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
ஒடிசா மாநிலத்தில் நடக்கவுள்ள ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான தொடக்க விழாவுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கான முதல் டிக்கெட்டை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வாங்கினார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ள ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்க்க உள்ளனர். இந்த் தகவலை நவீன் பட்நாயக், தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



ஷாருக்கான், இதற்குப் பதிலளித்துள்ளார். அதில், ஒடிசாவுக்கு வருகை தர, தான் ஆர்வமுடன் இருப்பதாகவும், நாட்டின் தேசிய விளையாட்டை முன்னிலைப்படுத்த வேண்டியது அனைவரது கடமை என்றும் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை ஹாக்கிக்கான டீசர் வெளியீடு

தொடக்க விழாவில் ஹாக்கி உலகக்கோப்பைக்கான சிறப்புப் பாடல் இசைக்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி 28-ம் தேதி கட்டாக் நகரில் ஹாக்கி உலகக்கோப்பை கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கிக்காக உருவாக்கப்பட்ட டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் வெளியிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த டீசர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இவர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆகியோரும் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளனர்.
குல்சாரின் வரிகளில் ஜெய் ஹிந்த் இந்தியா என்ற பாடலையும் உலகக் கோப்பைக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தக் காணொளியை அவரே இயக்கியுள்ளார்.

முதல் டிக்கெட்டை வாங்கிய ஒடிசா முதலமைச்சர்

இந்நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கான முதல் டிக்கெட்டை ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். ஹாக்கி இந்தியா தலைமை செயல் அலுவலர் எலெனா நார்மன் அவருக்கு டிக்கெட்டை வழங்கினார்.



வரும் 27-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு 10,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளும், 28-ம் தேதி நிகழ்ச்சிக்கு சுமார் 30,000 டிக்கெட்டுகளும் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, பெல்ஜியம் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. 28-ம் தேதியன்றே தனது முதல் போட்டியில் இந்திய அணி, தென் ஆஃப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

Also See...

Published by:Murugesan L
First published:

Tags: Hockey World Cup 2018

அடுத்த செய்தி