தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

news18-tamil
Updated: August 29, 2019, 7:40 PM IST
தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி
news18-tamil
Updated: August 29, 2019, 7:40 PM IST
தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இதில், விளையாட்டுத்துறையின் உயரிய விருதான, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Loading...

இதனைதொடர்ந்து 19 வீரர்கள், அர்ஜுனா விருதுகளை பெற்றுக்கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டரான பாஸ்கரன், அர்ஜுனா விருதைப் பெற்றார்.

 

அர்ஜுனா விருது  19 வீரர், வீராங்கணைகள்:

1. தஜிந்தேர் சிங்- தடகளம்
2. முகமது அனாஸ் - தடகளம்
3. பாஸ்கரன் - பாடிபில்டிங்
4. சோனியா லாதர்- குத்துச்சண்டை
5. ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட்
6. சிங்லென்சனா சிங் - ஹாக்கி
7. அஜய் தாக்கூர்- கபடி
8. கவுரவ் சிங் - மோட்டார் விளையாட்டு
9. ப்ரமோத் பகத்- பேட்மின்டன் (பாரா விளையாட்டு)
10. அஞ்சும் மோட்கில் - துப்பாக்கிச்சுடுதல்
11. ஹர்மீத் ரஜுல் தேசாய் - டேபிள் டென்னிஸ்
12. பூஜா தண்டா - மல்யுத்தம்
13. ஃபவுத் மிர்சா - குதிரைச்சவாரி
14. குர்பீத் சிங் - கால்பந்து
15. பூனம் யாதவ் - கிரிக்கெட்
16. ஸ்வப்னா பர்மன் - தடகளம்
17. சுந்தர் சிங் - தடகளம் (பாரா விளையாட்டு)
18. பாமிதிபடி சாய் ப்ரனித் - பேட்மின்டன்
19. சிம்ரன் சிங் - போலோ

Also watch

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...