• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்தப் போட்டி - 28-ம் தேதி மகாபலிபுரத்தில் தொடக்கம்

தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்தப் போட்டி - 28-ம் தேதி மகாபலிபுரத்தில் தொடக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் முதல் முறையாக இந்திய பீச் மல்யுத்த சங்கம் அறிமுகப்படுத்துகிறது. 

  • Share this:
ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக  மகாபலிபுரத்தில் உள்ள அரசு பீச் ரெசார்டில் வருகின்ற 28 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

ஆடவருக்கு 70, 80, 90, 90 என நான்கு எடை பிரிவிலும், மகளிருக்கு 50, 60, 70, 70 எடை பிரிவிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு சார்பாக நான்கு வீரர், நான்கு வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்திய மல்யுத்த சங்கத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான புஷன் சரண் சிங் இப்போட்டியை தொடங்கிவைக்கிறார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார், மற்றும் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கின்றனர்.

இந்த போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் குத்துச்சண்டை ஒலிம்பியன் தேவராஜ், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீராங்கனை ஹர்பீர் கௌர், இந்திய பீச் மல்யுத்த சங்க தலைவர் ரோஷர்த் சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக்கில் மல்யுத்தம் போட்டி தொடர்பாகவும், தமிழ்நாட்டில் பீச் மல்யுத்தத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் பேசிய இந்திய பீச் சங்க தலைவர் ரோஷர் சிங் தமிழகத்தில் திறமையான மல்யுத்த வீரர்கள் இருப்பதாகவும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தமிழகத்திலிருந்து மல்யுத்த வீரர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் இந்த போட்டி முதல் முறையாக தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பெருமைப்படுத்தினார். அத்துடன் கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும், பார்வையாளர்கள் அனுமதியின்றி வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: