தேசிய தடகள போட்டிகளில் பதக்கங்களை குவித்து தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை... குவியும் பாராட்டு

தேசிய தடகள போட்டிகளில் பதக்கங்களை குவித்து தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை... குவியும் பாராட்டு

 திருச்சி ரயில்வே ஊழியர் இலக்கியதாசன் 100மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நிலையில்  200 மீ ஓட்டத்தில் இலக்கியதாசன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

  • Share this:
தேசிய தடகள போட்டிகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி இன்று வரை தேசிய தடகளப்போட்டிகள்  நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாட்டு அணியில்  திருச்சியில் இருந்து மட்டும் 20 பேர் பங்கேற்றுள்ளனர்.  இந்த தேசிய தடகளப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த  வீரர், வீராங்கனை சாதனை புரிந்துள்ளனர்.
இதன்படி, பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர், 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை  பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார்.

திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். அப்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.

இதே போல்ஆண்கள் பிரிவில் 100 மீ ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே  ரயில்வே ஊழியரான தடகள வீரர்  இலக்கியதாசன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இருவரையும் திருச்சி தடகள சங்கத்தினர், ரயில்வே ஊழியர்கள் பாராட்டினர்.

இந்நிலையில், இன்று மாலை 200 மீ ஓட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டு அணியில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், 200மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். நூறு மீட்டரில் தனலட்சுமியிடம் பின்வாங்கிய ஹீமா தாஸ் 200 மீ தங்கம் வென்றுள்ளார். ஆண்கள் பிரிவில், திருச்சி ரயில்வே ஊழியர் இலக்கியதாசன் 100மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நிலையில்  200 மீ ஓட்டத்தில் இலக்கியதாசன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி கிராப்பட்டிச் சேர்ந்த விக்னேஷ் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்துள்ள திருச்சி வீரர், வீராங்கனையும் விரைவில் இந்திய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக, சாதாரண குடும்ப பின்னணியில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்போடு வளர்ந்து தடகளத்தில் பி.டி.உஷாவின் 23 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ள நம்ம வீட்டு சிங்கப் பெண் தனலட்சுமி.

பதக்கம் வென்ற மூவருக்கும் பயிற்சி அளித்தவர் முன்னாள் தடகள வீரர் , திருச்சி ராக்போர்ட் ஸ்டார் அகாடமியின் மணிகண்டன் ஆறுமுகம். பல்வேறு சிரமங்களுக்கிடையே பயிற்சி அளித்து சாதனையாளர்களை உருவாக்கிய, மணிகண்டன் ஆறுமுகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Vijay R
First published: