பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை?

டி.நடராஜன்.

தகுதியடைந்த வீரராக இருந்தாலும் அவருடைய சமீபத்திய செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிசிசிஐ வீரர்களின்  ஒப்பந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு சில விதிமுறைகள் இருப்பதன் காரணமாகவே நடராஜன் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

பிசிசிஐ விதிமுறைப்படி  இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அல்லது 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அல்லது 10 டி 20 கிரிக்கெட் போட்டி என இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை நிறைசெய்தால் மட்டுமே ஒப்பந்த செய்வதற்கு தகுதியுடைய வீரராக கருதப்படுகிறார்.

அந்த வகையில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக தற்போது வரை ஒரு டெஸ்ட் கிரிக்கெட், இரண்டு ஒருநாள், நான்கு டி 20 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார் எனவே இந்த ஆண்டு பிசிசிஐ - யின் ஒப்பந்த பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியடைந்த வீரராக இருந்தாலும் அவருடைய சமீபத்திய செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.

Also read... 2021ம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தப் பட்டியல் அறிவிப்பு: கோலி உட்பட 3 வீரர்களுக்கு ஏ+ பட்டியலில் இடம்!

இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் வீரருக்கு A கிரேடு தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கான ஒப்பந்த தொகையாக ஏழு கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததபடியாக A கிரேடில் இடம் பெறும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், B கிரேடு வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், C கிரேடு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் ஒப்பந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிசிசி ஐ யின் ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த வீரர் அஸ்வின் A கிரேடு வீரர்கள் பட்டியலிலும், இளம் வீரர் வாஷுங்டன் சுந்தர் C கிரேடு வீரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: