HOME»NEWS»SPORTS»natarajan poverty to thakur fitness inspiring tales of 5 indian stars who shone the brightest skv ghta

நடராஜனின் ஏழ்மை முதல் தாகூரின் பிட்னஸ் வரை- ஆஸ்திரேலியாவில் ஜொலித்த 5 இளம் வீரர்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் திருப்புமுனையாக இருந்த 5 வீரர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்

நடராஜனின் ஏழ்மை முதல் தாகூரின் பிட்னஸ் வரை- ஆஸ்திரேலியாவில் ஜொலித்த 5 இளம் வீரர்கள்
கிரிக்கெட்டில் ஜொலித்த ரியல் ஹீரோக்கள்!
  • Share this:

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் (Border-Gavaskar series) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-1 என்ற தொடர் வெற்றியை தொடர்ந்து, செவ்வாயன்று ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship (WTC)) நிலைகளில் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியா இப்போது 71.7 சதவீத புள்ளிகளையும் 430 புள்ளிகளையும் பெற்றுள்ளது. பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்ததால் யாருமே எதிர்பாராத வகையில் சில புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்தனர். வேறு வழியே இல்லாமல் தான் இவர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக மட்டும் அணியில் சேர்க்கப்பட்ட இளம் வீரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. இளம் அணி அனைத்து முரண்பாடுகளையும் தைரியமாக எதிர்க் கொண்டு, ஐ.சி.சி தரவரிசையில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் நிறுத்தியது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளதால், "இளம் இந்தியா இதை செய்துள்ளது" என்று சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். "இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு மந்திர தருணம்" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடரில் ஹீரோக்களாக சில இளம் வீரர்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்களில் முகமது சிராஜ், நவ்தீப் சைனி, டி நடராஜன், ஷார்டுல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் குறித்து நாம் இங்கு காண்போம்.இவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வாழ்க்கை பின்னணியை கொண்டவர்கள். சிலரின் ஏழ்மை மற்றும் கடின உழைப்பு அவர்களை இன்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்த இந்த 5 வீரர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வோம் .,

டி நடராஜன் (T Natarajan):

நடராஜன் சேலத்தை சேர்ந்த இளைஞர். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் வந்து, அங்கே இருந்து IPL தொடருக்குள்ளும் காலடி எடுத்து வைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு IPL தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சேலத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடி வந்தார் நடராஜன். அவரது பந்துவீச்சு துல்லியமாக இருப்பதை பார்த்த ஜெயப்ரகாஷ் என்ற டிவிஷன் கிரிக்கெட் வீரர், அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்.அங்கே போராடி தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தார். நடராஜனின் சிறப்பு யார்க்கர் மற்றும் கட்டர் வகை பந்துவீச்சு தான். அவர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளார் வார்னர். அவர் மத்திய ஓவர்களில் பந்து வீச வாய்ப்பு அளிக்க திட்டமிட்டு அவரை தேர்வு செய்துள்ளார். 2020 டிசம்பரில் கான்பெர்ராவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் ODI cap ஐ அவருக்கு வழங்கியதால் நடராஜனின் கிரிக்கெட் கனவு பயணம் வேற லெவலுக்கு சென்றது. அவரது தந்தை தங்கராசு ஒரு தறி நெய்யும் தொழிலாளி, அவரது தாய் சாந்தா தனது கிராமத்தில் ஒரு சாலை ஓர கடையை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.

வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar):

சில ஆண்டுகளுக்கு முன்பு IPL அணிக்காக விளையாடியதில் இருந்து வாஷிங்டன் சுந்தரின் (Washington Sundar) பெயர் பலரின் கவனத்தை ஈர்த்தது. வாஷிங்டன் சுந்தரின் 10 வயது முதல், அப்பா எம். சுந்தர் நடத்தி வந்த கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் சென்று விடுவாராம். ஸ்கூல் செல்லும் முன் 3 மணி நேரம் அங்கு தான் பயிற்சி மேற்கொள்வாராம். இப்படி சிறுவதிலே கடினமாக உழைத்ததின் பயனேU -14 தமிழ்நாடு அணியின் சார்பாக ரஞ்சி டிராபி விளையாடும் அணியில் இடம் பெற்றார் வாஷிங்டன் சுந்தர். IPL போட்டிகளில் அவர் சுழற் பந்துவீசி வருவதால், அனைவரும் அவரை ஒரு பந்து வீச்சாளராக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாட கூடிய ஒரு வீரர். சிறந்த பேட்ஸ்மேன்களுக்குகான 70 % தகுதி அவரிடம் உள்ளது.

நவ்தீப் சைனி (Navdeep Saini):

ஹரியானாவின் கர்னல் நகரில் பிறந்த சைனி ஒரு ஏழ்மையான நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஓட்டுநராக ஹரியானா அரசில் பணிபுரிந்தார். அவரது தாத்தா ஒரு சுதந்திர ஆர்வலராக இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தார். ஐந்து வயதில் தனது தந்தையிடம், கிரிக்கெட் பந்தை கேட்டதிலிருந்து கிரிக்கெட் மீதான அவரது காதல் மலர்ந்தது.அப்போது அவரது தந்தை அவருக்கு ஒரு பிளாஸ்டிக் பந்தை வழங்கினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது குடும்பத்தினர் அதிக அக்கறை காட்டவில்லை என்றாலும், அவர் தனது பள்ளி நாட்களில் தனது மாவட்டத்தின் உள்ளூர் அணிகளுக்காக பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல கப்புகளை வென்றுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur):

ஷர்துல் தாக்கூர் ஒரு காலத்தில் மிகவும் குண்டாக இருந்தார், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் உட்பட சரியான நபர்களால் அவர் வழிநடத்தப்படாவிட்டால் கிரிக்கெட்டிற்கான உடற்தகுதி சோதனையில் ஷர்துல் பாஸ் ஆகியிருக்கமாட்டார். "எனது மூத்தவர்கள் எனக்கு நிறைய உதவினார்கள்.அபிஷேக் நாயர், ரோஹித் சர்மா, ஜாகீர் கான், வாசிம் ஜாஃபர், மற்றும் சச்சின் டெண்டுல்கர் ( Abhishek Nayar, Rohit Sharma, Zaheer Khan, Wasim Jaffer and even Sachin Tendulkar) கூட. நான் அவர்களின் ஆலோசனையை நாடும்போதெல்லாம் அவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள்" என்று தாகூர் ஒரு முறை ஒரு பேட்டியில் கூறினார். அவரது உடற்தகுதி லெவலில் பாஸ் ஆனதும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians team) தேர்வு செய்தது.

முகமது சிராஜ் (Mohammed Siraj):

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 3வது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய அணியின் தேசிய கீதம் பாடப்பட்ட போது அறிமுக வீரரான முகமது சிராஜ் கண்கலங்கினார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆறுதல் கூறினார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்கும் போது சிராஜின் தந்தை காலமானார். காயம் காரணமாக வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே 2-வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் களம் இறங்கினார். கடந்த 7 ஆண்டுகளில் அறிமுக வீராக களமிறங்கிய எந்த இந்திய வீரரும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது. இந்த பெருமையும் சிராஜயே சாரும்.
Published by:Sankaravadivoo G
First published: