யுஎஸ் ஓபன்: நயோமி ஒசாகா பட்டம் வென்றார்

யுஎஸ் ஓபன்: நயோமி ஒசாகா பட்டம் வென்றார்
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 11:50 AM IST
  • Share this:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசோகா மீண்டும் பட்டம் வென்றார்.

நியூயார்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை ஒசாகா எதிர்கொண்டார். அஸரென்கா, முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

அதன்பின் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஒசாகா அடுத்தடுத்த இரு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் தொடரில் வாகைசூடினார்.


இளம் வீராங்கனை நயோமி ஓசாகா வெல்லும் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading