நேருக்கு நேர் அமர்ந்து விளையாடும் செஸ் போட்டி தான் எனக்கு பிடித்தமானது - விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்

கொரோனா வைரஸ் காரணமாக ஆன்லைன் மூலம் ஒலிம்பியாட் செஸ் போட்டி கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக ஆன்லைன் மூலம் ஒலிம்பியாட் செஸ் போட்டி கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து நடப்பாண்டும் ஒலிம்பியாட் செஸ் ஆன்லைம் மூலம் நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டி செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை ஆன்லைம் மூலம் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா,ரஷ்யா உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் அறிமுகம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விஸ்வநாதன் ஆனந்த் வழிநடத்துதலில் 11 இந்திய கிராண்மாடர்களை கொண்ட இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற கௌரவத்தோடு  களமிறங்குகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தன், வைஷாலி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன் ஆனந்த், கொரோனா காலத்தில் உலகில் அனைத்து விளையாட்டுகளும் முடங்கியிருந்தது. ஆனால் செஸ் விளையாட்டை பொருத்தவரை அவ்வாறு நாங்கள் உணரவில்லை. செஸ் விளையாட்டு  உயிர்ப்புடன் இருந்தது. இந்திய வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த முறை தங்கம் வென்றது போல் இம்முறையும் சிறப்பாக செயல்பட்டு அதை தக்கவைக்க முயற்சி செய்வார்கள்.

Also Read : ஓவலில் சுருண்டது இங்கிலாந்து... இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

கடந்த ஆண்டு வீரர்கள் அவரவர் இல்லத்திலிருந்து ஆன்லைன் மூலம் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். ஆனால் இம்முறை அனைவரையும் ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து விளையாடவுள்ளோம். அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இந்த முறை மேலும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும், நிறைய பயிற்சி ஆட்டங்கள் விளையாட வாய்ப்பாக அமையும். எனவே இம்முறை தங்கத்தை தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஆன்லைனில் செஸ் விளையாடுவதை விட நேரில் எதிரெதிரே விளையாடுவது தான் எனக்கு பிடித்த ஒன்று. ஆன்லைனில் செஸ் விளையாடுவதால் நிறைய கவனச்சிதறல் வரக்கூடும், இருப்பினும் அதற்கு நமது இந்திய வீரர்கள் பழகிவிட்டார்கள். தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என நம்பிக்கை அளித்தார். செஸ் விளையாட்டில் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருப்பதாகவும் மற்ற நாடுகளை விட தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருப்பதாகவும் பெருமிதமடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: