• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கமல்ஹாசனை திடீரென சந்திந்த பி.வி.சிந்து...

கமல்ஹாசனை திடீரென சந்திந்த பி.வி.சிந்து...

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல். அவர் நடித்த படங்களை விரும்பி ரசித்து பார்த்திருக்கிறேன் - பி.வி.சிந்து

  • Share this:
பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி.சிந்து, கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.  திடீரென நடந்த இந்த சந்திப்பிற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் சிந்து தெரிவித்தார். 

”எனக்கு பிடித்த நடிகர் கமல். அவரின் திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவரை சந்தித்து அவரோடு மதிய உணவு உண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.   ” என்று பி.வி. சிந்து தெரிவித்தார்.

மேலும், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் பிவி சிந்து தெரிவித்தார்.



கமல்ஹாசன் பேசுகையில், “இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. அவரை வரவேற்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. தேசத்தின் பெருமையை கொண்டாடும் ஒரு விஷயம் என்றும் சொல்லலாம்“ என்றார்.

தமிழகம் வரும் சீன அதிபர் குறித்து பேசுகையில், “சீன அதிபர் தமிழகம் வருகிறார். இரண்டு நாட்டு தலைவர்கள் 60 வருடங்களுக்கு பின் தமிழகத்தில் சந்திக்கின்றனர். இந்தியா - சீனா உறவு மேம்படவேண்டும் என்ற ஆசையுள்ளது. சீன அதிபரிடம் எங்கள் பிரதமர் திறம்பட செயல்படுவார். அவருக்கு எனது வாழ்த்துகள்“ என்றார் கமல்ஹாசன்.

Also Watch : உலகநாடுகள் இந்திய விளையாட்டுத் துறையின்வளர்ச்சியில் கைகோர்க்கவேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: