• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Muttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Muttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

ஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

  • Share this:
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சற்றுமுன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் இருந்துள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார்.

நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் கண்டியைச் சேர்ந்தவரான முத்தையா முரளிதரன், தமிழகத்தின் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர், முரளிதரனின் மனைவி மதிமலர் ராமமூர்த்தி சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு! - என்னென்ன கட்டுப்பாடுகள்?


முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு தமிழில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார் முரளிதரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: