மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய சிக்கல் - ஐ.பி.எல் ஏலத்தில் செய்ய வேண்டியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய சிக்கல் - ஐ.பி.எல் ஏலத்தில் செய்ய வேண்டியது என்ன?

நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும், வியப்பளிக்கும் விதமாக அவர்களை அணியில் இருந்து மும்பை அணி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், லிசித் மலிங்காவுக்கு ஈடான பந்துவீச்சாளரை அவர்கள் எடுத்தாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும், வியப்பளிக்கும் விதமாக அவர்களை அணியில் இருந்து மும்பை அணி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், லிசித் மலிங்காவுக்கு ஈடான பந்துவீச்சாளரை அவர்கள் எடுத்தாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சு பின்னடைவாக இருப்பதால், குறைந்தது 2 வெளிநாட்டு வீரர்களையாவது ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஸ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அரபு ஆமீகரத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக வாகை சூடி அசத்தியது. நடப்பாண்டு ஐ.பி.எல் 14 தொடர் இந்தியாவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் ஜேம்ஸ் பேட்டிசன், நாதல் கூல்டர் நைல் மற்றும் மிட்செல் மெக்லிகன் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சு பட்டாளத்தை தங்களது அணியில் இருந்து விடுவித்துள்ளது. லசித் மலிங்காவை முதலில் விடுவித்த அந்த அணி, பின்னர் ரீட்டெய்ன் செய்து கொள்வதாகவும் அறிவித்தது. ஆனால், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துவிட்டார். இதனால், மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட், இந்திய வீரர் பும்ரா ஆகியோர் இருந்தாலும், அவர்களுக்கு பக்கபலமான மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை. இதனால், ஐ.பி.எல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை குறி வைத்து எடுக்கவேண்டிய நிலையில்  மும்பை அணி உள்ளது. இதுகுறித்து யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணணையாளருமான ஆகாஷ் சோப்ரா, நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான மும்பை அணி பந்துவீச்சு வரிசையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Also read... இங்கிலாந்துக்கு 3-0 தோல்வி: அந்த ஸ்பின்னர்களை வைத்துக் கொண்டு அவர்களால் வெல்ல முடியாது- கம்பீர்

நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும், வியப்பளிக்கும் விதமாக அவர்களை அணியில் இருந்து மும்பை அணி விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், லிசித் மலிங்காவுக்கு ஈடான பந்துவீச்சாளரை அவர்கள் எடுத்தாக வேண்டும் எனக் கூறியுள்ளார். குறைந்தது 2 வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை மும்பை தேர்தெடுக்க வேண்டும் என்பதால், மலிங்காவுக்கு இணையாக ஸ்டார்கை ஏலத்தில் எடுக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார். ஒருவேளை மும்பை அணி ஸ்டார்க்கை எடுத்தால், பும்ரா - ஸ்டார்க் கூட்டணி மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என சோப்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், " ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க தவறும்  பட்சத்தில், கூல்டர் நைலை மீண்டும் ஏலத்தின் மூலமாக எடுக்கலாம். ரிச்சார்ட்சன், கிறிஸ் மோரீஸ், ஷெல்டன் காட்ரல் உள்ளிட்டோரும் ஏலப் பட்டியலில் இருந்தாலும், கேம் சேஞ்சராக அவர்கள் இருக்க வாய்ப்பில்லை என கணித்துள்ளார். அதனால், நாதன் கூல்டர் நைலை மீண்டும் மும்பை அணிக்கு தேர்தெடுப்பது மட்டுமே மிகச்சிறந்த முடிவாக இருக்கும்" என கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணியாகவும், பலமான அணியாகவும் இருந்து வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: