ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்

MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்

தோனி

தோனி

சரியான எண்ணங்களை நடவு செய்தல் என்ற கேப்ஷனுடன் சிஸ்கே ட்விட்டர் ஹேண்டிலில் பதிவான தோனியின் புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேண்டிலில் வெளியான தோனியின் புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

  மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் சிம்லாவுக்கு ஜாலி டூர் சென்றிருந்தார். தோனி தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தொடர்ந்து சிம்லாவில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். ஹேண்டில் பார் மீசையுடன் இருக்கும் தோனியின் நியூ லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  சிம்லாவில் மரக்குடில் ஒன்றில் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேண்டிலில் பதிவு செய்யப்பட்டது. இந்த புகைப்படம் தான் இப்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சரியான எண்ணங்களை நடவு செய்தல் என்ற கேப்ஷனுடன் சிஸ்கே ட்விட்டர் ஹேண்டிலில் பதிவான அந்த போட்டாவில் மரங்களை நடுவோம், காடுகளை காப்போம் என்ற வாசகம் எழுதப்பட்ட மரத்தாலான பலகைக்கு அருகே தோனி போஸ் கொடுத்திருப்பார். இதுதான் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தோனியின் செயல் முரணாக இருக்கிறது என ஒரு ட்விட்டர் யூஸர் கூறியுள்ளார். மேலும் ஒரு ட்விட்டர் யூஸரோ, ‘ மரப்பலகையில் மரங்களை நடுவோம், காடுகளை காப்போம் என எழுதிவைத்துள்ளீர்கள். இது சிகரெட் கம்பெனி கேன்சர் மருத்துவமனையை கட்டியது போல் உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். ’

  இந்த புகைப்படமானது ஹிமாச்சல் பிரதேசம் ரத்னாரில் உள்ள மீனாபாக் என்னும் ஓய்வு இல்லத்தில் எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள அந்த ஓய்வு இல்லத்தின் உரிமையாளர், “அது பயன்படாத மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு, குளிர்காலத்தில் தீ மூட்டவே இந்த மரத்துண்டுகள் பயன்படுத்தப்படும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Dhoni, Himachal, MS Dhoni, Tree plantation, Ziva Dhoni