ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் மகள் ஸிவா.. வைரலாகும் வீடியோ

தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் மகள் ஸிவா.. வைரலாகும் வீடியோ

தோனியின் நடனம்

தோனியின் நடனம்

மகள் சொல்லிக்கொடுக்கும் நடன அசைவுகளை கவனித்தபடியே தோனி நடனமாடுகிறார் | MS Dhoni's dance video with daughter Ziva goes viral

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு அவரது மகள் நடனம் கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூல் கேப்டன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஆட்டத்தின்போது எப்படிப்பட்ட நிலையிலும் சற்றும் பதட்டப்படாமல் நிதானமாக இருந்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. என்னதான் விளையாட்டின் போது அமைதியாகவும், பதட்டப்படாமல் இருந்தாலும் அவ்வப்போது ஆடுகளத்தில் சக வீரர்களுடனும் அவர் செய்யும் சேட்டைகள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட்டில் பிஸியாக இருந்தாலும் தனது மனைவி, மகளுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார். அவர்களுடன் வெளியில் செல்வது, புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவிடுவது என்று சிறந்த கணவர், தந்தையாகாவும் இருந்து வருகிறார். அப்படி அவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமானது தான். தற்போது அவர் தனது மகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மகள் ஸிவா தோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். மகள் சொல்லிக்கொடுக்கும் நடன அசைவுகளை கவனித்தபடியே தோனி நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. ஸிவாவின் நடனம் அழகாக இருப்பதாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
 
View this post on Instagram
 

Even better when we are dancing @zivasinghdhoni006


A post shared by M S Dhoni (@mahi7781) onPublished by:Prabhu Venkat
First published:

Tags: Dance, MS Dhoni, Ziva Dhoni