லாக்டவுனை மகள் ஸிவா, செல்ல பிராணியுடன் கழிக்கும் தோனி: வைரலாகும் வீடியோ..!

தோனி மற்றும் மகள் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் பைக் ரைடு செய்யும் வீடியோவை சாக்‌ஷி சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

லாக்டவுனை மகள் ஸிவா, செல்ல பிராணியுடன் கழிக்கும் தோனி: வைரலாகும் வீடியோ..!
தோனி மற்றும் ஸிவா
  • Share this:
ஊரடங்கு நேரத்தில் தனது செல்ல பிராணிக்கு பந்தை எப்படி கேட்ச் செய்ய வேண்டும் என தோனி தனது மகள் ஸிவா உடன் சேர்ந்து கற்றுக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

கொரோனா வைரஸ் அச்சத்தால் விளையாட்டு நாயகன்கள் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். பெரும்பாலும் வீரர்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் நேரலையில் பேசி பல தருணங்களை நினைவூட்டி பேசி மகிழ்கின்றனர்.

இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பும் அதிகம் இருப்பதால், நாள்தோறும் வீரர்கள் இன்ஸ்டாவில் பேசி வருகின்றனர்.


கொரோனா தாக்கத்திற்கு இடையிலும் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி என்னவோ தோனியை பற்றியே. தோனி, எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்ற கேள்வியே அவர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தோனி குறித்த வீடீயோ ஒன்று தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சிஎஸ்கே நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், தோனி தனது பண்ணை வீட்டில் பொழுதை கழிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போதைய வைரலாகியுள்ளது.
தனது செல்ல மகள் ஸிவா உடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை எப்படி கேட்ச் செய்வது என்பதை இருவரும் கற்றுக்கொடுக்கின்றனர். தோனி, புல்தரையில் அமர்ந்து கொண்டு, மகள் ஸிவாவுக்கு பந்து வீச கற்றுக்கொடுக்க, மழலை மொழியில் அதனை ஸிவா நாய்க்கு சொல்ல, செல்ல பிராணி அதனை பிடித்து விளையாடுகிறது.

சாக்‌ஷி எடுத்த இந்த வீடியோவை சிஎஸ்கே டுவிட்டர் பக்கத்தில் பகிர, தோனி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, தோனி மற்றும் மகள் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் பைக் ரைடு செய்யும் வீடியோவை சாக்‌ஷி சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


Also see...
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading