ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

MS Dhoni : மகளை கொஞ்சும் தோனி - இன்ஸ்டாகிராமில் வைரல் புகைப்படம்!

MS Dhoni : மகளை கொஞ்சும் தோனி - இன்ஸ்டாகிராமில் வைரல் புகைப்படம்!

மகளை கொஞ்சும் தோனி

மகளை கொஞ்சும் தோனி

தோனி தனது மகள் ஷிவா சிங்கைக் கொஞ்சும் அழகிய புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தோனியைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாடினாலும், விளையாடவிட்டாலும் எப்போதும் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கிலேயே இருப்பார். அவர் சமூகவலைதளங்கள் பக்கம் அடிக்கடி வராவிட்டாலும் அவரைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படும். அந்தவகையில், தோனி தன் மகள் ஷிவாவைக் கொஞ்சும் அழகிய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை தோனி மகளின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஷிவா சிங்கின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு புகைப்படங்கள் பகிரப்பட்டன. அதில் தோனி தன் செல்ல மகள் ஷிவாவைக் ஆரத்தழுவி கொஞ்சுகிறார். ஷிவா சிங்கின் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த இரண்டு புகைப்படங்களும் உடனடியாக இணையத்தில் வைரலாகின. இருப்பினும், இந்த இரு புகைப்படங்களும் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல. பழைய புகைப்படங்களாகும். ஏனென்றால், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தோனியின் மனைவி ஷாக்சியும், ஷிவாவும் ராஞ்சியில் உள்ள தங்களது வீட்டில் இருக்கின்றனர்.

தோனி, ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரே ஒர தோல்வியை மட்டும் சந்தித்து 5 வெற்றிகளை பெற்றுள்ளது. சென்னை அணிக்கு சிறப்பான ஆண்டாக இருந்தாலும், இதுவரை தோனிக்கு ஏற்ற தொடராக அமையவில்லை.

ALSO READ : தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இல்லை- ஆகாஷ் சோப்ராவின் சிறந்த ஐபிஎல் 2021 லெவனில் இடமில்லை

இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை களமிறங்கிய போட்டிகளில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்கவில்லை. 6 போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 12.33 என்ற மிக குறைந்தபட்ச சராசரியை வைத்துள்ள அவரின் ஸ்டைக்ரேட் 123.33 ஆக மட்டுமே இருக்கிறது.

ஏறக்குறைய ஐ.பி.எல்லின் முதல்பாதி நிறைவடைந்துள்ள நிலையில், 2வது பகுதி ஐ.பி.எல் போட்டியிலாவது தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ALSO READ : நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

ஐ.பி.எல் 2021 புள்ளிப்பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 2 வது இடத்திலும், டெல்லி அணி 4 வெற்றிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. ரோகித் தலைமையிலான மும்பை அணி 2 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 7வது மற்றும் கடைசி இடங்கள் முறையே ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இடம்பிடித்துள்ளன.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chennai Super Kings, CSK, IPL 2021, MS Dhoni, Ziva Dhoni