• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 'வாட் இஸ் வலிமை? மொயின் அலி என்னிடம் கேட்டார்.. எனக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை' - அஸ்வின் ஜாலி டாக்

'வாட் இஸ் வலிமை? மொயின் அலி என்னிடம் கேட்டார்.. எனக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை' - அஸ்வின் ஜாலி டாக்

அஸ்வின்

அஸ்வின்

நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒருவர் வந்து அஸ்வின் அஸ்வின் என அழைத்தார். என்ன பா என கேட்டதற்கு வலிமை அப்டேட் என்ன என கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

  • Share this:
    சேப்பாக்க டெஸ்ட் போட்டியின் இந்திய அணியில் விளையாடும் லெவனில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணியில் இரண்டு தமிழர்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் 50% ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

    இந்த போட்டியின்போது ரசிகர்கள் சிக்ஸ் லைனில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் அலி பாய் வலிமை அப்டேட் என கேட்டு அஜித் ரசிகர்கள் சேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு வாயே திறக்காத அஜித்தையும் அறிக்கைவிட வைத்தது.

    இது ஒருபுறம் இருக்க அஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து பேசிய அவர், நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தேன்.அப்போது திடீரென ஒருவர் வந்து அஸ்வின் அஸ்வின் என அழைத்தார். என்ன பா என கேட்டதற்கு வலிமை அப்டேட் என்ன என கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு கூகுள் சென்று பார்த்தால் எனக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை.

    ALSO READ :  ஜி.பி. முத்து முதல்.. கிரிக்கெட் ஸ்டேடியம் வரை - ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்!

    வலிமை அப்டேட்டை எப்படி கிரிக்கெட் மேட்ச்சுடன் தொடர்பு கொள்ளவது என யோசிச்சுட்டே இருக்கும் போது மொயின் அலி வந்தார், அவர் வாட் இஸ் வலிமை என என்னிடம் கேட்டார். அவரையும் அழைத்து அப்டேட் கேட்டுள்ளனர்.

     

     



     

    மாஸ்டர் படம் கிரேட். வலிமை அப்டேட் இங்கிலாந்து ப்ளேயரிடம் கேட்டதெல்லாம் அவுட் ஸ்டாண்டிங். இதனை நான் எனது தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. கலக்கீட்டிங்க என கூறியுள்ளார்.

    முன்னதாக பிப்ரவரி 15-ம் தேதிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என சமீபத்தில் தெரிவித்திருந்த போனி கபூர் முதல்முறையாக ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



    இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: