முகப்பு /செய்தி /விளையாட்டு / Mithali Raj : "மாஸ்க் தான் பிரச்சனையே"- தந்தையை கிண்டலடித்த மிதாலி ராஜ்!

Mithali Raj : "மாஸ்க் தான் பிரச்சனையே"- தந்தையை கிண்டலடித்த மிதாலி ராஜ்!

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், சிறப்பு குவாரன்டைனில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜூம், தன்னால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார்.

இந்திய பெண்கள் அணியின் ஒருநாள் தொடருக்கு கேப்டனான அவர், தற்போது மும்பையில் இருக்கிறார். அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், சிறப்பு குவாரன்டைனில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். மிதாலி ராஜின் தந்தை, மகள் இல்லாதபோதும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.

ALSO READ | நான் ஒன்றும் முட்டாள் அல்ல: வாசிம் அக்ரம் திடீர் ஆவேசம்

இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள மிதாலி ராஜ், கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற சிறிய உதவிகளை செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.தான் அங்கு இல்லாதபோதும் ஆட்டோ மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு தேவையான உதவிகளை தன்னுடைய தந்தை வழங்கியதாக கூறியுள்ள மிதாலி, அவரிடம் இருக்கும் ஒரே பிரச்சனை மாஸ்கை முறையாக அணியாதது என கிண்டலடித்துள்ளார்.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்காக, மும்பையில் வீரர் மற்றும் வீராங்கனைகள் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குவாரன்டைன் முடிந்த பிறகு ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும் இந்திய அணியில், ஆண்கள் அணியினர் சவுதாம்ப்டனிலும், பெண்கள் அணி பிரிஸ்டோலில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

இந்திய பெண்கள் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணியுடன் விளையாட உள்ளது. இந்தப் போட்டியானது ஜூன் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்குப் பிறகு 3 ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 20 ஓவர் தொடரில் பங்கேற்க உள்ளது.

ALSO READ |  அதீத ஆக்ரோஷம் தேவையில்லை: கோலிக்கு லெஜண்ட் கபில் தேவ் அறிவுரை

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு மிதாலி ராஜ் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் தொடருக்கு ஹர்ம்ந்த்பிரீத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டுடன் மிதாலி ராஜ் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதுவரை 214 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7,098 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இதில் ஏழு முறை சதமடித்துள்ளார். 55 போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Cricket, Mithali Raj