• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விருதாச்சலத்தில் விரைவில் கால்பந்து சிறப்பு அகாடமி: அமைச்சர் செங்கோட்டையன்

விருதாச்சலத்தில் விரைவில் கால்பந்து சிறப்பு அகாடமி: அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

தொரவழூர் அரசு மேல்நிலைபள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் இந்தாண்டு கூடுதல் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விருதாச்சலத்தில் கால்பந்து சிறப்பு அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் விருதாச்சலத்தில் அதிகமான கால்பந்து வீரர்கள் இருப்பதாகவும், அவரகள் பயிற்சி பெற வசதியாக கால்பந்து அகாடமி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

எல்லா கிராமங்களிலும் இளைஞர் விளையாட்டு குழு: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இதுகுறித்து சினர்ஜி என்ற அமைப்பிடம் பேசி இருப்பதாகவும் விரைவில் விருதாச்சலத்தில் கால்பந்து சிறப்பு அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Also Read: Chennai Power Cut | சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை!

மேலும், தொரவழூர் அரசு மேல்நிலைபள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் இந்தாண்டு கூடுதல் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: