முகப்பு /செய்தி /விளையாட்டு / அர்ஜெண்டினா வீரர்களுக்கு தங்கத்தால் ஆன ஐ-போன்கள் பரிசு... மெர்சலாக்கிய மெஸ்ஸி

அர்ஜெண்டினா வீரர்களுக்கு தங்கத்தால் ஆன ஐ-போன்கள் பரிசு... மெர்சலாக்கிய மெஸ்ஸி

மெஸ்ஸி

மெஸ்ஸி

தனித்துவமான இந்த தங்க ஐபோன்கள் புதிய மாடலான 14வது மாடலைச் சேர்ந்தவையாகும்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Internationa, Indiaargentina

கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி நிர்வாகத்தில் இருந்த 35 பேருக்கு, தங்கத்தால் செய்யப்பட்ட தனித்துவமான ஐஃபோனைகளை நட்சத்திர வீரர் மெஸ்ஸி வழங்கியுள்ளார்.

கத்தாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி வென்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற அணிக்கு திடீர் இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பிய கேப்டன் மெஸ்ஸி, இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஐபோன்களை ஆர்டர் செய்தார்.

வீரர்களின் பெயர்கள், ஜெர்ஸி எண்கள் மற்றும் அணியுடன் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்களுடன் தங்கத்தால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட அந்த போன்கள் வீரர்களின் வீடுகளுக்கே பிரத்யேகமாக அனுப்பிவைக்கப்பட்டது.

தனித்துவமான இந்த தங்க ஐபோன்கள் புதிய மாடலான 14வது மாடலைச் சேர்ந்தவையாகும்.மெஸ்ஸி தங்களிடம் 35 போன்களை ஆர்டர் அளித்ததாக, தங்க ஐபோன்களை உருவாக்கும் idesign gold நிறுவனம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Gold, IPhone, Lionel Messi, Tamil News