முகப்பு /செய்தி /விளையாட்டு / சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

சரசரவென கூடிய 50 லட்சம் ரசிகர்கள்.. அர்ஜெண்டினா பஸ்ஸுக்குள் குதித்த ரசிகர்.. ஹெலிகாப்டரில் தப்பிய மெஸ்ஸி..

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

சாலைகளின் இரு புறங்களிலும் மேள தாளங்கள் முழங்க, மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaArgentinaArgentina

அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட பேரணியில் பல லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் ஹெலிகாப்டரில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து திறந்த பேருந்தில் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பயணித்த நிலையில், வழி நெடுகிலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

சாலைகளின் இரு புறங்களிலும் மேள தாளங்கள் முழங்க, மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு ரசிகர் பாலத்தில் இருந்து கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்தி குதித்தார். அதேபோல் மற்றொருவர் குதித்தபோது கீழே விழுந்து அவரது மண்டை உடைந்தது.

ஒருகட்டத்திற்கு மேல் பேருந்து நகர முடியாமல் பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் கருதி மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டரில் நகரை வலம் வந்து மக்களின் வரவேற்பை ஏற்றனர்.

First published:

Tags: Argentina, FIFA World Cup 2022, Lionel Messi